ஆண்கள் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் முறையான பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை.


ஆண்கள் எந்தவொரு கிரீமையும் சருமத்தில் தடவுவதற்கு விரும்பமாட்டார்கள்.
ஆனால் சரும வறட்சியை தடுக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்


சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க
ஆண்களும் சன்ஸ்கிரின் கிரீம்களை பயன்படுத்தலாம்


வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட முதுமை
தோற்றத்தை தள்ளிப்போடும் 'ஆன்டி ஏஜிங் கிரீம்'களை ஆண்கள் அவசியம் பயன்படுத்தவும்.


க்ரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்யக்கூடாது.
இது சரும வறட்சிக்கு வழிவகுத்து விடும்.


சரும செல்கள் பாதிப்பை எதிர்கொள்வதால்
முகத்திற்கு சோப்புக்கு பதில் பேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும்


சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்களை நீக்க
ஆண்களும் அவ்வப்போது ஸ்கிரப் செய்தால் பொலிவு பெறும்


பால்-பாதாம், தயிர்-லவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய்-ப்ரவுன் சுகர்,
ஓட்ஸ்-கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி எளிதாக 'ஸ்கிரப்' செய்யலாம்.


சாப்பிடும் உணவுகள் மூலமாகவும் சருமத்தை ஆரோக்கியமாகவும்,
பளபளப்பாகவும் பராமரிக்க முடியும்


ஷேவிங் செய்த பிறகு லோஷனையும் தவறாமல் தடவ வேண்டும்.
இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்