கருத்த உதட்டை பளபளவென மாற்றும் சர்க்கரை பேஸ்ட்! பெண்களுக்கு சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்காக பல முறைகளில் பல விஷயங்களை செய்து வருவார்கள் சில பொருட்களால் ஒவ்வாமை போன்ற சருமப்பிரச்சினையை சந்திக்க நேரிடும் முகத்தில் இருக்கும் உதட்டையும் பார்த்து கொள்வது அவசியம் உதட்டை அழகாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்போம்.. தேன், எலுமிச்சை மற்றும் சீனி சேர்த்து நன்றாக கிளற வேண்டும் இந்த கலவையை பயன்படுத்தி உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும் இரண்டு நிமிடங்கள் முடிந்தவுடன் தண்ணீரினால் உதட்டை கழுவி விட வேண்டும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இதை செய்து வரும்போது வித்தியாசத்தை உணரமுடியும்