கிராம்பு பல வகையான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும். அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து ஏற்படலாம்!

Published by: குலசேகரன் முனிரத்தினம்

நாளொன்றுக்கு அதிகமாக கிராம்பு உட்கொண்டால், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கிராம்பில் அதிக அளவு யூஜெனால் உள்ளது, இதை அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.

அதிக அளவு கிராம்பு சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கிராம்பு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

சிறுவர்களுக்கு பச்சையாக கிராம்பு கொடுப்பது ஒருபோதும் கூடாது. இது உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

யாருக்கேனும் அலர்ஜி இருந்தால், அதிகளவு கிராம்பு சாப்பிடுவதால் தோலில் அரிப்பு, தோல் சிவந்து போதல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கிராம்பு ரத்தை மெலிதாக்குகிறது. இதனால் உடலில் காயம் ஏற்பட்டால் ரத்தம் கசியும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சிகிச்சை செய்ய திட்டமிருந்தால், குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே லவங்கத்தை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிராம்பு மட்டுமே சாப்பிட வேண்டும்.