இந்த முறையில் சுத்தம் செய்தால், குளியலறையின் முரட்டுத்தனமான கறைகள், நீங்கும்
Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels
இக்காலத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் அறைகள் முதல் குளியலறை வரை டைல்ஸ் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
Image Source: pexels
மேலும் குளியலறை சுவர்களிலும் பெரும்பாலும் டைல்ஸ் பயன்படுத்தப்படுகின்றன.
Image Source: pexels
அவ்வாறு இருக்கும்போது, குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தில் எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, வீட்டின் குளியலறையை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
Image Source: pexels
ஆனால் வெள்ளை டைல்ஸில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் போவதில்லை, அப்படி இருக்கும்போது என்ன செய்ய வேண்டும், வாங்க தெரிஞ்சுக்கலாம்.
Image Source: pexels
மஞ்சள் கறைகளையும் கடினமான நீரின் கறைகளையும் நிமிடங்களில் அகற்ற எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவின் கலவை ஒரு மந்திரமாக வேலை செய்கிறது.
Image Source: pexels
கறை படிந்த இடத்தில் பேக்கிங் சோடாவைத் தூவி, அதன் மேல் எலுமிச்சை சாறை ஊற்றி, 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து, மெதுவாக பிரஷ் கொண்டு தேய்த்து, சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
Image Source: pexels
மேலும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகரை கலந்து கறைகள் மீது தெளிக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, ஒரு பிரஷ்ஷால் தேய்த்து சுத்தம் செய்யவும்.
Image Source: pexels
மேலும் ஹைட்ரஜன் பெராக்சைடு இரசாயனம் டைல்ஸ் மற்றும் தரையில் உள்ள கறைகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த மற்றும் எளிதான வழி.
Image Source: pexels
குழாயில் படிந்திருக்கும் கறைகளை நீக்க மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தலாம். அதை கறையின் மீது தேய்த்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.