நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Published by: ராஜேஷ். எஸ்

மூளையை கூர்மையாக வைத்திருக்க இந்த 8 குறிப்புகளைப் பின்பற்றவும்.

சரியான தூக்கம் மற்றும் ஆழ்ந்த உறக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தூக்கம் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

மூளைக்கு பயிற்சி கொடுங்கள். அதாவது மூளை விளையாட்டுகள் விளையாடுங்கள்.

சத்தான உணவை உண்ணுங்கள். மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை மற்றும் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை குறையுங்கள்.

வேலைகளை கற்பனை செய்து பார்ப்பது, செய்த வேலையை மறுபரிசீலனை செய்வது நல்லது.

உடல் உழைப்பை அதிகரிக்கவும் அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது.

மன அழுத்தத்தை போக்கும் தியானம், பிராணாயாமம் செய்யுங்கள்.

பல வேலைகளை செய்யாமல் இருப்பதே நல்லது.

இவை அனைத்தும் உங்கள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.