நாம் அடிக்கடி, உணவுப் பொருட்களை நீண்ட நேரம் ப்ரெஷ்ஷாக வைத்திருக்க ஃபிரிட்ஜில் வைக்கிறோம்.
Image Source: freepik
ஆனால், உங்களுக்குத் தெரியுமா.? சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைப்பது சரியல்ல என்று..
Image Source: freepik
எந்தெந்த பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்..
Image Source: freepik
ஃபிரிட்ஜில் உருளைக்கிழங்கை வைக்கக்கூடாது. ஏனெனில், ஃபிரிட்ஜின் வெப்பநிலை உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சை உடைக்கிறது. இதன் விளைவாக உருளைக்கிழங்கு இனிப்பாக மாறும்.
Image Source: freepik
ஃப்ரிட்ஜின் வெப்பநிலை, வாழைப்பழங்களை பழுக்க வைப்பதை தடுக்கும். அதனால் அவற்றை சாதாரண வெப்பநிலையில் வெளியிலேயே வைக்கவும்.
Image Source: freepik
தக்காளி பழத்தையும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது. ஃபிரிட்ஜின் வெப்பநிலை தக்காளியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.
Image Source: freepik
பிரட்-ஐ(Bread) ஃபிரிட்ஜில் ஒருபோதும் வைக்கக்கூடாது. ஏனெனில், ஃபிரிட்ஜ் பிரட்-ஐ விரைவில் கெட்டுப்போகச் செய்யும்.
Image Source: freepik
இஞ்சி பூண்டு விழுதை ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் மணம் மற்றும் காரம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.