தங்கு தடையின்றி இரவில் நிம்மதியாக தூங்க கீழே காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Image Source: pexels

பலருக்கும் தூக்கத்தின் நடுவே விழித்துக் கொள்ளும்போது பின்னர் தூக்கம் வராமல் அவதிப்படும் அபாயம் உள்ளது.

Image Source: pexels

நேரத்தை குறிங்க

தூங்குவதற்கு ஒரு முறையான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். இரவில் குறிப்பிட்ட மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும் என முடிவு எடுங்கள்.

Image Source: Canva

தூங்கும் முன்பு பால்

தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதால் உங்கள் உடலில் மெலடோனின் அளவு உயரும். இதனால், நிம்மதியாக தூங்கலாம்.

Image Source: Canva

குளியலை போடுங்க

குளிப்பது சுறுசுறுப்பை உண்டாக்குவது போல, தூங்கச் செல்லும் முன்பு குளிப்பதால் நிம்மதியாக தூங்கலாம். புத்துணர்ச்சியுடன் தூங்கலாம்.

Image Source: pexels

படுக்கையில் செல்போனுக்கு நோ

பலரது தூக்கம் கெடுவதற்கு முக்கிய காரணமாக செல்பாேன் மாறியுள்ளது. இதனால், இரவில் தூங்க சென்ற பின் படுக்கையில் செல்போனை பயன்படுத்தக் கூடாது.

Image Source: pexels

நல்ல காற்று, அமைதி

நிம்மதியான தூக்கத்திற்கு சூழல் மிகவும் முக்கியம். படுக்கையறையில் எந்த சத்தமும் இல்லாத வகையில் அமைதியும், நல்ல காற்றோட்டமும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Image Source: pexels

லைட்ஸ் ஆஃப்

பலரது தூக்கத்திற்கும் இடையூறாக இருப்பது வெளிச்சம் ஆகும். இதனால், தூங்கச் செல்லும்போது விளக்குகளை அணைத்துவிட்டு தூங்குவது நல்லது ஆகும். இதனால், உடலில் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து நிம்மதியான தூக்கம் தரும்.

Image Source: pexels

நல்ல நிம்மதியான தூக்கம் மன அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரும்.

Image Source: Canva