இயற்கை எழில் கொஞ்சும் கோவா அதன் நீண்ட கடற்கரைக்கும், இரவு வாழ்க்கைக்கும் மிகவும் பிரபலம்.
கோவாவை பொறுத்தமட்டில் பகலை காட்டிலும் இரவு மிகவும் கொண்டாட்டமானதாக இருக்கும். விருந்துகளும், கேளிக்கைகளும் நிரம்பிய இடமாக கோவா உள்ளது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் கோவாவிற்கு சுற்றுலா பயணிகள் குவிவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பது அவசியம் ஆகும்.
கோவாவிற்கு முதன்முறையாக பயணம் செய்யும் பெண்கள் சுற்றிப் பார்க்கும்போதும், அந்நியர்களுடன் பழகும்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்
கோவா செல்லும் பெண்கள் தங்கள் பயணத்தை இனிதாக்க கீழே உள்ள பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிப்பது நல்லது
சூரியோதயத்திற்கு பிறகு தனிமை கடற்கரை மற்றும் கூட்டம் குறைவாக உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது ஆகும்.
கோவாவைப் பொறுத்தமட்டில் மது விருந்து பிரதானமாக உள்ளது. முன்பின் தெரியாத நபர்களுடன் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
கோவா போன்ற பெரிய இடங்களில் பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்திக் கொள்வது நல்லது ஆகும்.
கோவாவைச் சுற்றிப் பார்க்க அங்கு ஸ்கூட்டர்கள், பைக்குகள் எளிதாக கிடைக்கும். அதை சவாரிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோவாவில் செல்லும்போது உங்கள் உதவிக்கு போலீஸ், ஆம்புலன்ஸ், உங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோரது எண்ணை தயாராக வைத்திருங்கள்.