அலாரம் அடிக்காமலே விழித்துக்கொள்ள டிப்ஸ் இதோ!

Published by: பிரியதர்ஷினி

அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுவதால் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்

காலையில் எழுந்தால் நம் வேலைகளை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும். லேட்டாக எழுந்தால் அவசர அவசரமாக அனைத்தையும் செய்வோம் இதனால் சில விஷயங்களை மறந்துவிடுவோம்

நமக்கு பிடித்த உணவுகளை சமைக்கலாம், குடும்பத்துடன் பேச கொஞ்சம் நேரம் கிடைக்கும், உற்சாகம் தரும் தத்துவ பாடல்களை கேட்கலாம். இப்படி செய்தால் பணி இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இது பயனளிக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு, பாடம் மனதில் நன்றாக பதியும். இதனால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம்

காலையில் அலுவலகம், பள்ளிக்கூடம், கல்லூரி என எதற்கு சென்றாலும் அவசர அவசரமாக செல்லாமல் நிதானமாக செல்லலாம்

அத்துடன் நேரத்திற்கும் செல்லலாம் எதையும் செய்வதற்கான துணிவும், உடம்பில் ஆற்றலும் கிடைக்கும். இதனால் செய்யும் செயல்கள் வெற்றிகரமாக முடியும்

அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டத்தை அமைக்க முடியும். இதனால் ஒரு விஷயத்தையும் தவிர்க்காமல் அனைத்தையும் செய்ய முடியும். காலையில் எழுந்தால் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைக்கும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்

காலையில் எழுந்துக்கொள்ள வேண்டுமென்றால், இரவில் நேரத்திற்கு தூங்க வேண்டும். ஒரே நேரத்தில் தூங்கி எழுந்தால் உடல் அதை பக்குவப்படுத்திக்கொள்ளும். இதனால் அலாரம் இல்லாமலே நீங்கள் ஷார்ப்பாக எழுந்துக்கொள்வீர்கள்