மாதவிடாய் முன்னதாக வருவதற்கான காரணங்கள்?

Published by: ராஜேஷ். எஸ்

அதிக மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்கலாம்.

ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்டிரோன் அளவுகள் மாறினால் மாதவிடாய் சுழற்சி மாறும்.

அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்.

திடீரென எடை அதிகரிப்பது அல்லது குறைவது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும்.

தைராய்டு கோளாறுகளால் மாதவிடாய் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வரலாம்.

கர்ப்பத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.

வயது அதிகரிக்கும்போது மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக மாறும்.

வயதாக ஆக மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்காது.

யோனியில் அல்லது இனப்பெருக்க மண்டலத்தில் தொற்றுகள் ஏற்பட்டால் மாற்றங்கள் ஏற்படும்.

தூக்கமின்மை, உணவுப் பழக்கங்கள், பயணங்கள் போன்ற மாற்றங்களும் காரணமாகின்றன.