Desk Work செய்பவருக்கு வைட்டமின் D குறைபாடு வரக் காரணம் என்ன?

Published by: ராஜேஷ். எஸ்

இக்காலத்தில் அலுவலக வேலைகளால் பலர் சூரிய ஒளியை குறைவாக பெறுகிறார்கள்.

இதன் காரணமாக பலர் வைட்டமின் டி குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Desk Work செய்பவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டிற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

நாள் முழுவதும் வீடு அல்லது அலுவகத்திற்குள்ளேயே இருப்பதால் இது நிகழ்கிறது.

சூரிய ஒளி குறைவாகப் படுவதால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

பலர் சன்ஸ்கிரீனை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவும் குறைபாடு அதிகரிக்கிறது.

உடல் உழைப்பு இல்லாததும் வைட்டமின் டியை குறைக்கும்.

வைட்டமின் டி நிறைந்த உணவை உணவில் சேர்த்துக்கொள்ளாததாலும் இது நிகழ்கிறது.

வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.

ஆகவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதோடு வெயிலில் இருப்பது நல்லது.