பசியைக் கடந்து ருசிக்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மட்டுமில்லாமல் அஜீரணத்திற்கு வேறு காரணங்களும் உள்ளது.
சில தருணங்களில் வயிறு உப்பசம் அல்லது வயிறு மந்தமாக இருப்பது போல உணர்வு உண்டாகும்.
இதுபோன்ற வலிகளுக்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
எந்தவொரு உணவையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்படியே விழுங்குவதாலும் செரிமானக் கோளாறு உண்டாகலாம்.
உணவில் அதிகளவு காரத்தைச் சேர்த்துக் கொள்வதும் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம்.
உணவில் அதிக உப்பு இருப்பது எப்போதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஆகும். இதன் காரணமாகவும் வயிறு வலி உண்டாகலாம்.
உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பயறு வகைகள் போன்ற சில உணவுப்பொருட்கள் வாயுக்கோளாற்றை உண்டாக்கலாம்.
இரவில் சோடா, குளிர்பானங்கள் குடிப்பதாலும் அஜீரணம் ஏற்படலாம்.
இரவு உணவுக்குப் பிறகு நடக்காமல் இருப்பதும் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம்.