நாம் அனைவரும் லிப்ஸ்டிக் பயன்படுத்த விரும்புகிறோம் ஆனால் அதில் சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அடிக்கடி லிப்ஸ்டிக் போட்டு கொள்வதால் என்னென்ன ஆபத்துகள் இங்கே.. லிப்ஸ்டிக்கில் இருக்கும் பாதரசம், ஈயம், காட்மியம் போன்றவை நம் உடல் நலத்திற்கு நல்லதல்ல இந்த ரசாயனங்களால் பல வகையான நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன நாம் அதிகமாக லிப்ஸ்டிக் தடவினால், உதடுகள் வறண்டு, விரிசல் கூட ஏற்படலாம் இது ஒவ்வாமை, உதடுகளின் நிற மாற்றம் மற்றும் முகத்தில் தோல் தொடர்பான பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் நீண்ட நேரம் உதட்டுச்சாயம் அணிவது உதடுகளின் நிறத்தை கருமையாக்கும், அதை மீட்டெடுப்பது கடினம் நாம் உணவு உண்ணும் போது, உதட்டுச்சாயத்தின் சில பகுதிகள் நம் உடலுக்குள் சென்று, வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும் பல உதட்டுச்சாயங்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன