வீட்டு கேஸ் சிலிண்டர் விஷயத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள் - இதை பின்பற்றவில்லை என்றால் ஆபத்து

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixbay

வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி காஸ் சிலிண்டர்களை மிகவும் கவனமாக பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்துகள் தவிர்க்க முடியாது.

Image Source: pixabay

முன்பெல்லாம் சமையலுக்கு மண் அடுப்புகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் LPG மூலம் சமையல் செய்கிறார்கள்.

Image Source: pixabay

சில சமயங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விபத்துகள் பற்றிய செய்திகள் வருகின்றன. இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படுகிறது.

Image Source: pixabay

சிலிண்டரை எப்போதும் நிமிர்ந்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், குழாயில் அழுத்தம் அதிகரித்து கேஸ் கசியக்கூடும்.

Image Source: pixabay

புதிய சிலிண்டர் பொருத்தும்போதும் அல்லது கேஸ் வாசனை வந்தாலும் தீப்பெட்டியால் பரிசோதிக்காமல் சோப்பு திரவத்தால் சரிபார்க்க வேண்டும்.

Image Source: pixabay

சாதாரண ரப்பர் குழாய்களுக்கு பதிலாக, ISI குறியீடு கொண்ட பாதுகாப்பான ரப்பர் பைப் மட்டுமே பயன்படுத்துங்கள்.

Image Source: pixabay

சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். கசிவு ஏற்பட்டால், கேஸ் உடனடியாக வெளியேறும்.

Image Source: pixabay

கேஸ் வாசனை வந்தால் உடனடியாக ரெகுலேட்டரை ஆஃப் செய்ய வேண்டும். வீட்டில் மெயின் சுவிட்சை ஆஃப் செய்வதோடு ஜன்னல்கள், கதவுகளைத் திறக்க வேண்டும்.