பாதாம் ஆரோக்கியம் நிறைந்தது. தினமும் பாதாம் டயட்டில் இருப்பது நல்லது. பாதாமை தோலுடன் சாப்பிடலாமா என வெகுகாலம் விவாதிக்கப்பட்டு வருகிறது. தோலோடு பாதாம் சாப்பிடுவது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.. பாதாம் தோலுடன் சாப்பிடுவது பாதுகாப்பானது. பாதாம் தோலுடன் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. பாதாம் தோலில் ஃபைபர் அதிகம் இருக்கிறது.இது செரிமான திறனை மேம்படுத்தும். ஆனாலும் சிலருக்கு பாதாமை தோலுடன் சாப்பிடுவது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தலாம். அப்படி சிக்கல்கள் இருப்பவர்கள் மட்டும் தோல் நீக்கிவிட்டு பாதாம் சாப்பிடலாம். இது பொதுவான தகவல் மட்டுமே.