மெதுவாக சாப்பிடுவதால் செரிமானம் நன்றாக இருக்கும், ஊட்டச்சத்து உறிஞ்சப்படுதல் சிறப்பாக இருக்கும், மேலும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளும் இருக்காது.



சிறு சிறு துகள்களாகப் பிரித்து, உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால், செரிமான நொதிகள் சிறப்பாக வேலை செய்கின்றன.



உணவை மெதுவாக சாப்பிட்டால், உடலில் உள்ள உணவை உடைக்கும் நொதிகளின் செயல்பாடு அதிகரிக்கும்.



இப்படி சாப்பிடுவதால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.



உள்ளே இருக்கும் ஆரோக்கியமும் பராமரிக்கப்படுகிறது. மேலும், அனைத்து உணவுத் துகள்களும் உணவுக் குழாய்க்குள் செல்கின்றன.



இதன் காரணமாக மெதுவாக சாப்பிடுவது உடலில் முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.



சாப்பிட ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குப் பிறகு, வயிறு நிரம்பிவிட்டது என்ற சமிக்ஞை மூளைக்குச் செல்கிறது.



அதனால் மெதுவாக சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட முடியாது.