பிளாக் டீயை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி, தலையில் ஸ்ப்ரே செய்து ஊற வைத்து குளிக்கலாம்



தலையை அலசுவதற்கும் இதை பயன்படுத்தலாம். இந்த பிளாக் டீயில் சர்க்கரை சேர்க்க கூடாது



கற்றாழை, ஸ்கால்பில் இருக்கும் சேதமடைந்த செல்களுக்கு புத்துயிர் ஊட்டும்



இதன் ஜெல்லை தலையில் ஊற வைத்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்



வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலையில் தடவலாம்



இந்த அற்புதமான மாஸ்க், உடலை குளிர்ச்சியாக்கி முடி உதிர்வை குறைக்கலாம்



முட்டை கரு, தலை முடியை வலுவாக்கி, முடி வளர்ச்சிக்கும் உதவும்



முட்டை கருவை கிண்ணத்தில் ஊற்றி பீட் செய்து, தலையில் தடவி ஊற வைத்து குளிக்கலாம்



வெங்காயத்தை அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்



இந்த சாறை சிறிது நேரம் தலையில் தேய்த்து குளித்தால் முடி வளர வாய்ப்புள்ளது