கொளுத்தும் கோடை வெயில்.. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்?

Published by: ஜேம்ஸ்

ஆரஞ்சு சாறில் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்ச்சத்து குறைபாடு குறையும்.

இதிலுள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அளிக்கிறது.

கோடையில் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை தரும்.

ஆரஞ்சு உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும்.

இயற்கையான சர்க்கரைகள் சோர்வை குறைத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.

கோடையில் வெப்ப பக்கவாதம் வராமல் ஓரளவு பாதுகாக்கும்.

இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

தினமும் அதிகமாக குடித்தால், இயற்கையான சர்க்கரை காரணமாக இரத்த சர்க்கரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.