காலையில் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

காலை நடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சிறந்த இயற்கை வழியாகும்

ஆரோக்கியமாக இருக்க தினமும் 30-45 நிமிடங்கள் நடப்பது நல்லது.

புதிதாக நடைபயிற்சி தொடங்கினால் குறைந்தபட்சம் இருபது நிமிடங்களுடன் ஆரம்பியுங்கள்

தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறையும்.

வெறும் வயிற்றில் நடப்பதால் அதிக கொழுப்பு வேகமாக கரையும். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தினமும் நடப்பது மூட்டு மற்றும் எலும்புகளின் வலிமைக்கு சிறந்தது.

நடை பயிற்சிக்கு சிறந்த நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரை ஆகும்

காலை நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, உங்கள் மனநிலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

நடைக்குப் பிறகு 5-10 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகளின் இறுக்கம் குறையும்.