வீட்டிலேயே சுவையான பாதாம் பால் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பாதாம் பாலில் வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது

பாதாம் பால் சுவையாக வர வேண்டும் என்றால் புதிய தரமான பாதாம் பருப்புகளைப் பயன்படுத்த வேண்டும்

பாதாம் பருப்புகளை 8 முதல் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அவை மென்மையாகி அரைக்க எளிதாக இருக்கும்

ஊறவைத்த தண்ணீரை அகற்றிவிட்டு பாதாம் பருப்புகளை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்

ஒரு கப் ஊறவைத்த பாதாம் பருப்புகளுடன் 3 முதல் 4 கப் குடிநீர் சேர்த்து பிளெண்டரில் போடவும். உங்களுக்கு எவ்வளவு கெட்டியாக வேண்டுமோ அதற்கு ஏற்ப நீரின் அளவை மாற்றிக்கொள்ளலாம்

1 முதல் 2 நிமிடங்கள் வரை அரைக்க வேண்டும். பாதாம் பருப்புகள் முழுமையாக மென்மையாகி பால் போன்ற வெள்ளை கலவையாக மாற வேண்டும்

மஸ்லின் துணி, மெல்லிய பருத்தி துணி அல்லது நட் மில்க் பை உதவியுடன் கலவையை வடிகட்டவும்.

தேவைப்பட்டால் பேரீச்சம்பழம், தேன், ஏலக்காய்த்தூள் சிறிதளவு சேர்த்து சுவையை அதிகரிக்கலாம்

இப்படி தயாரிக்கப்பட்ட பாதாம் பாலை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பொதுவாக இது 3 முதல் 4 நாட்கள் வரை புதிதாக இருக்கும்

வடிகட்டிய பிறகு மீதமுள்ள பாதாம் பருப்பு பேஸ்ட்டை ஸ்மூத்திகள், குக்கீஸ், சப்பாத்தி மாவு அல்லது பிற உணவுகளில் பயன்படுத்தலாம்

குடிப்பதற்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்க வேண்டும்