சிலிண்டரில் எவ்வளவு கேஸ் இருக்குனு செக் செய்வது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கேஸ் சிலிண்டர் நகரம் முதல் கடைக்கோடி கிராமம் வரையிலான மக்களால் சமையலறையில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த சிலிண்டரில் எரிவாயு எப்போது காலியாகும் என நம்மால் கணிக்க முடியாது. இதனால் சமையல் நேரங்களில் நாம் அவதியுகிறோம்.

இதனை ஈரமான துணி அல்லது சாக்பீஸ் மூலமும் அறியலாம் என சொல்லப்படுகிறது.

ஒரு சுத்தமான துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளவும். அந்த ஈரம் தண்ணீர் சொட்டாத அளவுக்கு இருக்க வேண்டும்.

அந்த துணியை சிலிண்டரின் பக்கவாட்டில் செங்குத்தாக மேலிருந்து கீழ் வரை கட்ட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து அந்த துணியை எடுத்து விட வேண்டும்.

இப்போது சிலிண்டரின் கீழ் பகுதி ஈரமாகவும் தொடுவதற்கு குளிர்ச்சியாகவும் இருக்கும்.

சிலிண்டரின் மேல் பகுதி வேகமாக காய்ந்துவிடும். குளிர்ச்சியான பகுதியானது எரிவாயு எவ்வளவு இருக்கிறது என்பதை குறிப்பதாகும்.

இதேபோல் ஈரமான சாக்பீஸ் பயன்படுத்தியும் மேலிருந்து கீழாக கோடு போட்டு அளவை சரி பார்க்கலாம்

சாக்பீஸ் காய்ந்த இடம் எரிவாயு காலியான இடம் என்றும், ஈரமாக இருக்கும் இடத்தில் கேஸ் இருக்கும் என்பதும் அறிகுறியாக சொல்லப்படுகிறது.
இரும்பு சிலிண்டர்களில் மட்டுமே இந்த சோதனையை நாம் மேற்கொள்ள முடியும்