தினசரி உட்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுப் பொருட்களுள் பாலும் ஒன்று பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் பால் உதவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்க வேண்டிய ஒரு பானம் வயதிற்கு ஏற்ப பாலைக் குடிக்கும் அளவு வேண்டுமானால் வேறுபடலாம் குழந்தைகள் ஒரு நாளைக்கு பலமுறை பாலைக் குடிக்க வேண்டும் பெரியவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட குடிக்கலாம் உடலின் வளர்ச்சி மற்றும் தேவையைப் பொறுத்து மாறுபடும் டயட்டில் இருக்கும் பலரும் பாலை தவிர்க்கிறார்கள் குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும்