வெள்ளரிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடல் நீரேற்றத்தை சீராக வைக்கிறது.
இஞ்சி வயிற்றுக்கு மிகவும் நல்லது ஆகும். செரிமானத்தை ஆரோக்கியப்படுத்துவதுடன் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
தேனில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்கிறது.
பெருஞ்சீரகம் ஏராளமான நன்மைகள் கொண்டது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேற உதவுகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும்.
சர்க்கரை அளவை சீராக வைத்து பசியை குறைக்க இந்த இலவங்க பட்டை கலந்த தேன் உதவுகிறது. கொழுப்பையும் குறைக்கிறது.
உடலில் உள்ள கலோரியை எரிக்கும் சக்தி காஃபிக்கு உள்ளது.
கேரட்டில் நார்ச்சத்து பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.கல்லீரல் நச்சுத்தன்மையை போக்கும்.
இயற்கையான எலக்ட்ரோலைட் பானம் தேங்காய் தண்ணீர். உடல் நீரேற்றத்தை அதிகரிக்கிறது.
கொத்தமல்லி ஏராளமான நன்மைகள் கொண்டது. வீக்கத்தை சீர்செய்தல், செரிமானத்தை சீராக்குதல் உள்ளிட்ட வயிற்றுக்கு நன்மை பயக்கும்.