ஒரு மனிதனுக்கு சிரிப்பு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி உள்ளது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

மனதிற்கு புத்துணர்ச்சி

வாய்விட்டு சிரிப்பதால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால், உடலின் ஆரோக்கியம் நன்றாக நீடிக்கும்.

Image Source: Canva

கவலைகள் குறையும்

வாய்விட்டு சிரிப்பதால் எண்டோர்பின்கள் வெளியாகிறது. இது உடலின் வலியை குறைப்பதுடன் மனதில் உள்ள கவலைகளை குறைக்கிறது.

Image Source: Canva

நல்ல தூக்கம்

வாய்விட்டு சிரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. இதனால், தூக்கம் நன்றாக வருகிறது. தூக்கமின்மை பிரச்சினை சீராகிறது.

Image Source: Canva

அதிகரிக்கும் ஆக்சிஜன்

சிரிப்பதால் உடலின் ஆக்சிஜன் உட்கொள்ளல் அதிகரிக்கிறது. இது நுரையீரல், இதயத்தின் செயல்பாட்டை சீர்படுத்துகிறது.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

சிரிப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் குறைகிறது. இதனால், இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

Image Source: Canva

அதிகரிக்கும் ஆயுள்

வாய்விட்டு சிரிப்பதால் மனமும், உடலும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாக இருப்பதால் நமது ஆயுள் அதிகரிக்கிறது.

Image Source: Canva

நினைவாற்றல் அதிகரிப்பு

மன அழுத்தத்தை குறைக்கம் சக்தி கொண்ட சிரப்பால் நமது மூளையின் ஆற்றலும் அதிகரிக்கிறது. இதனால், மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாகிறது. மன நிலையும் மேம்படுவதுடனும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.

Image Source: Canva

தணியும் பதற்றம்

கவலையை மறைந்து சிரிப்பதால் உடலின் பதற்றம் குறைகிறது. இதனால், நாம் நிம்மதியாக இருக்க முடியும்.

Image Source: Canva