தூக்கமின்மை தனிநபரின் ஆரோக்கியத்தை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல்,



அவரது சமூக தொடர்புகளையும் சீர்குலைக்கிறது, மேலும், மனித சமுதாயத்தின் கட்டமைப்பை சீரழிக்கிறது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.



மோசமான உறக்கம் ஒருவரது மன நலனை மோசமாக பாதிக்கிறது.



PLOS உயிரியல் எனும் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சில சோதனைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



முதலாவது, நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பச்சாதாபம் கொள்ளும் திறனுடன் தொடர்புடைய மூளையின் நரம்பு மண்டலத்தில், தூக்கமின்மை காரணமாக எவ்வாறு செயல்திறன் குறைகிறது என்பதை நிரூபித்துள்ளது.



நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எனு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி,



தூக்கமின்மை மக்களின் தனிமை உணர்வுகளை அதிகரிக்கிறது.



மேலும் ஒருவரது சமூக ஈடுபாட்டை அதிகரிக்கும் மூளையின் நரம்பு மண்டலத்தில் செயல்திறனைக் குறைத்து மற்றவர்களுடன் உரையாடுவதையும் குறைக்கிறது.



வெப்பமான காலநிலை மக்களின் தூக்கத்தை கடினமானதாக்குகிறது.



இதில் சுவாரஸ்யமானத் தகவல் என்னவென்றால், அதிக வெப்பநிலை மக்களுக்கு ஏற்படும் ஆக்ரோஷம் மற்றும் மோசமான மனநிலையுடன் தொடர்புடையது.