சருமத்தை பளபளக்க செய்யும் ட்ரை ப்ரஷிங்..எப்படி செய்வது..?



பொதுவாக குளிக்கும் போது அனைவரும் லூஃபா பயன்படுத்தி ப்ரஷ் செய்வதுண்டு



ஆனால் ட்ரை ப்ரஷிங் என்பது தண்ணீர் பயன்படுத்தாமல் வெறும் ப்ரஷ் கொண்டு உடலை ப்ரஷ் செய்வதாகும்



இது உடலில் படிந்து இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது



இவ்வாறு இறந்த செல்கள் அகற்றப்படுவதால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்



இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ட்ரை ப்ரஷிங் செய்யலாம்



காலை வேளையில் குறைந்தது 5 நிமிடங்கள் ட்ரை ப்ரஷிங் செய்துவிட்டு குளிக்கலாம்



ட்ரை ப்ரஷிங் செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது



ட்ரை ப்ரஷிங் செய்வதற்கென்று இருக்கும் ப்ரஷ்களை வாங்கி பயன்படுத்துங்கள்



காயங்கள், அலர்ஜி மற்றும் சொரியாசிஸ் இருந்தால் ட்ரை ப்ரஷிங்கை தவிர்ப்பது நல்லது