உருளைக்கிழங்கு இருந்தால் ஊருக்கே வகை வகையாய் சமைக்கலாம் என்பார்கள்.



அப்படி சமையலில் ஆல் இன் ஆல் அழகு ராஜா உருளைக்கிழங்கு.



சால்சா உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாகும்.



3 உருளைக்கிழங்கு,1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்,1 தேக்கரண்டி கருப்பு மிளகு,1 தேக்கரண்டி தனியாத் தூள்,
தேவையான அளவு உப்பு,1 வெங்காயம்,1 தக்காளி,1 டீஸ்பூன் எலுமிச்சை



உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, துண்டுகளை 150 டிகிரி செல்சியஸில் 5 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.



பிறகு, உருளைக்கிழங்கை அடுப்பில் வைத்து, மிருதுவாகும் வரை சுடவும்.



ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து உப்பு, கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும்.



மசாலா கலவையுடன் கலந்து, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தைச் சேர்க்கவும்.



சால்சா உருளைக்கிழங்கு உணவு பரிமாறத் தயாராக உள்ளது.