கே.ஜி.எப். முதல் பாகத்திற்கு பிறகு நடிகர் யாஷிற்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது அதையடுத்து கே.ஜி.எப். இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளிவந்தது கே.ஜி.எப். இப்படத்தின் மிக பெரிய பிளஸ் ரவி பிரஸ்ரூரின் பின்னணி இசைதான் படம் முழுவதும் புல்லரிக்கும் காட்சிகளை வைத்து ரசிகர்களுக்கு விருந்தினை படைத்துள்ளார் பிரசாந்த் நீல் ராக்கிங் ஸ்டார் யாஷின் பன்ச் டயலாக்ஸ் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது ராக்கி பாய் சுத்தியலை கையில் எடுக்கும் போது, திரையரங்குகளில் ஆரவாரம் வழிந்து நிறைந்தது பெரியம்மா சீனும் வேற லெவலில் இருந்தது! சொல்லப்போனால் திரையை தீப்பிடிக்க வைத்தவர் யாஷ் தான் வசூல் ரீதியாகவும் பீஸ்ட் படத்தினை விஞ்சியது கே.ஜி.எப்-2!