ஈஷா மையத்தில் திரையிடப்பட்ட ‘காந்தாரா’ சிறப்புக் காட்சி!

தீபாவளி தினத்தில், கோவை ஈஷா மையத்தில் காந்தாரா திரைப்படம் திரையிடப்பட்டது

சிறப்பு காட்சியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர்

இத்திரைப்படத்தை, ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்

இதற்கு முன் ஈஷாவில் திரையிடப்பட்ட திரைப்படம் மணிகர்ணிகா என்பது குறிப்பிடத்தக்கது

ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப் படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் காந்தாரா

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

கடந்த செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா படம் வெளியாகி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில், அக்.15 ஆம் தேதி வெளியானது

உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது