பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் கங்கனா ரனாவத். தமிழில் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார் கங்கனா. பாலிவுட்டில் மீ டூ தொடர்பாக சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பு விவகாரத்தில் பாலிவுட்டின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜகவுக்கு ஆதரவான கருத்துககளை வெளியிட்டு வருகிறார் ஆரம்பத்தில் வழக்கமான கதாபாத்திரங்களில் நடித்தவர் பின்னர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் மிகுந்த கதைகளில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார் யோகா மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.