இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான படம் விக்ரம்..!




பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது!



இப்படம் வெளியாகி இன்றுடன் 113வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது!


இப்படம் 100 வருட தமிழ் சினிமாவில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.




இப்படத்தின் தமிழ் டீசர் இதுவரை 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது!


இப்படத்தின் தமிழ் டிரைலர் இதுவரை 42 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது!



பெரும் வரவேற்பை பெற்ற ’பத்தல பத்தல’ பாடல் இதுவரை 90 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது!



இப்படத்தின் டைட்டில் சாங் இதுவரை 43 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது!



லோகேஷ் கனகராஜின் சொந்த மாவட்டமான கோவையில் உள்ள கே.ஜி சினிமாஸில் 113 நாட்களை கடந்து ஓடிக்கொண்டுள்ளது!



இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது!