பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது



PS-2,கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டது



மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 செப்டம்பர் மாதத்தில் வெளியானது



விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து இருந்தனர்



திரையரங்குகளில் கோடிக்கணக்கான வசூலை குவித்த இப்படம், ஓடிடி தளமான அமேசான் ப்ரைமிலும் வெளியானது



பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது



இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் முன்னதாகவே நடந்து முடிந்தது



இன்று மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் 2 குறித்த தகவல் வெளிவரும் என லைகா அறிவித்து இருந்தது



தற்போது, PS 2 வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது



முதல் பாகம் வசூலை குவித்த நிலையில் 2 ஆம் பாகத்திற்கான எதிர்பார்ப்புகள் பயங்கரமாக இருந்து வருகிறது