ஜிகர்தண்டா என்பது அனைத்து வயதினரும் பருகக்கூடிய குளிர்பானமாகும் ஜிகர்தண்டா மதுரையின் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகும் இதனை நாம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம் தேவையான பொருட்கள் பாதாம் பிசின்(2 டீஸ்பூன்), சர்க்கரை (1 கப்), பால்(1 லிட்டர்), நன்னாரி சர்பத்(3 ஸ்பூன்), ஐஸ்க்ரீம் ( 2 ஸ்கூப்), பாலாடை (தேவையான அளவு) முதல் நாள் பாலை நன்கு காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும் மறுநாள் பாதாம் பிசினை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும் பின் ஒரு டம்ளரில் பால்- பாதாம் பிசின் கலவையை எடுத்துக் கொள்ளவும் அதன்மேல் நன்னாரி சர்பத்தை சிறிதளவு சேர்க்கவும் இதனுடன் பிரிட்ஜில் வைக்கப்பட்ட பாலை ஊற்றவும் இதில் சேர்க்கப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த கடல்பாசி உடலுக்கு நல்லது