குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகளில் ஒன்று கடலை மிட்டாய் தேவையான பொருட்கள் பச்சை வேர்க்கடலை - 1 கப், வெல்லம் - 3/4 கப், தண்ணீர் (தேவையான அளவு), நெய் - (1 டீஸ்பூன்) பெரிய பாத்திரத்தில் வேர்க்கடலையைச் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும் அதனை மிக்ஸியில் போட்டு இரண்டாக உடைத்து அரைக்க வேண்டும் மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் , தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும் வெல்லப்பாகை வேர்க்கடலையின் மீது ஊற்றி நன்கு கலக்கவும் ஒரு தட்டில் நெய் அல்லது எண்ணெய் தடவி வேர்க்கடலை கலவையை சமமாக பரப்ப வேண்டும் அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி காற்றுப்புகாத பாட்டிலில் வைக்க வேண்டும் கிட்டதட்ட ஒரு மாதம் வரை இதனை நாம் பயன்படுத்தலாம் நிலக்கடலையில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது