இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் விராட்கோலி.



ய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் நாளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ள உள்ளார். விராட் கோலி.



விராட் கோலிக்கு 100-வது டி20 போட்டி..



மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற இருக்கிறார்.



முன்னாள் கேப்டன் தோனி கொடுத்த நம்பிக்கையை மிகவும் விரும்பியதாக அவர் சமீபத்திய டீவீட்டில் தெரிவித்து உள்ளார்.



இந்த மனிதரின் நம்பகத்திற்குரிய துணையாக இருந்தது என் வாழ்வில் நான் விரும்பிய,



எனக்கு மிகவும் பிடித்த தருணமாக இருந்தது. எங்கள் பார்ட்னர்ஷிப்கள் எப்போதும் சிறந்ததாக இருந்தது,



இவரும் தோணியும் இணைந்து விளையாடிய காலங்களில் பல அசாத்திய வெற்றிகளை நிகழ்த்தி காட்டி உள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது.



ஆடுகளத்திற்கு வெளியே இருவரும் நல்ல நண்பர்கள்.



விராட் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.