இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்!



இரும்புச்சத்து குறைபாடு என்பது தீவிரம் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும்



சில நேரங்களில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை உண்டு செய்யலாம்



இந்த நிலை, இரத்த சிவப்பணுக்கள் அல்லது இரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாத போது உண்டாகிறது



ஹீமோகுளோபின் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல அனுமதிக்கிறது



இதனால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது பல அறிகுறிகள் வெளிப்படுத்துகிறது



சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்



சாம்பல், பல்பம் ஆகியவற்றை சாப்பிட தோன்றும்



தோல் மஞ்சள் அல்லது வெளிர் நிறத்தில் காணப்படும்



ஒழுங்கற்ற இதயத்துடிப்பு அல்லது சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும்