இன்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன

குஜராத் விளையாடிய 10 போட்டிகளில் நான்கில் வென்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது

பெங்களூர் 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம்

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பெங்களூர் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது

பெங்களூர் அணி, கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது

கடந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டதை போன்றே செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணி வெல்லலாம்

குஜராத் அணியில் பேட்டிங்கில் பெரும் அதிரடி பட்டாளமே உள்ளது

கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், ரித்திமான் சாஃகா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது அணிக்கு பின்னடைவாக உள்ளது

பந்துவீச்சிலும் ரஷித் கானை தவிர மற்ற வீரர்கள் யாரும் நடப்பு தொடரில் குஜராத் அணியில் பெரிதாக சோபிக்கவில்லை

Thanks for Reading. UP NEXT

ஐபிஎலில் அதிக முறை ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் பட்டத்தை பெற்றவர்கள்!

View next story