எம்.எஸ்.தோனி ஐபிஎல் 2025 சீசனில் புதிய சாதனைகளை படைக்க தயாராக இருக்கிறார்.
தோனி 43 வயதில், ஐபிஎல்-லில் அதிக வயது அரைசதம் அடித்த வீரர் என்ற கில்கிறிஸ்ட் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
சுரேஷ் ரெய்னாவின் 4687 ரன்கள் சாதனையை முறியடித்து, சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக தோனி மாற வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 19 ரன்கள் தேவை.
ஐபிஎல் வரலாற்றில் 200 டிஸ்மிஸல்களை எட்டிய முதல் விக்கெட் கீப்பராக தோனி சாதனை படைக்கலாம். அவருக்கு இன்னும் 10 டிஸ்மிஸல்கள் தேவை.
தோனி தற்போது 190 டிஸ்மிஸல்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக டிஸ்மிஸல்கள் செய்த விக்கெட் கீப்பராக உள்ளார்.
தோனி ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த சாதனைகள் அவரது ஐபிலில் போட்டிகளில் முறியடிக்க முடியாத சாதனையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தோனி பல இளம் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். அவரது வழிகாட்டுதல் அணிக்கு மிகவும் முக்கியமானது.
தோனி ஐபிஎல் 2025 சீசனில் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.