54 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டது



டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது



கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் சேர்த்து இருந்தது



236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது



நிதானமாக இலக்கைத் துரத்த திட்டமிட்ட லக்னோ அணி பொறுமையாகவே விளையாடியது



ஸ்டோய்னிஸ், கேப்டன் கே எல் ராகுலுடன் இணைந்து விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடி வந்தார்



கே எல் ராகுல் 21 பந்தில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ஹர்ஷித் ராணாவிடம் இழந்து வெளியேறினார்



அடுத்து வந்த தீபக் ஹூடா ஐந்து ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்



நிக்கோலஸ் பூரனும் அணியின் ஸ்கோர் 101 ஆக இருந்தபோது தனது விக்கெட்டினை ரஸல் பந்தில் இழந்து வெளியேறினார்



16.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது லக்னோ



கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது