நேற்று மும்பைக்கும் லக்னோவுக்கும் இடையே போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது பின்னர் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் பியூஷ் சாவ்லா தனது சிறப்பான பந்துவீச்சால் பேட்ஸ்மான்களுக்கு குறைந்த ரன்களை கொடுத்து வந்தார் பின்னர் குருனல் பாண்டியாவும், ஸ்டோய்னிஸ்சும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தனர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் 47 பந்துகளில் 89 ரன்களை அடித்து விளாசினார் பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர் இஷான் கிஷன் 59 ரன்களை குவித்தார் சூரியகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார் இக்கட்டான கடைசி ஓவரில் லக்னோவின் மோசின் கான் பந்து வீசினார் 5 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியை வெற்றி பெற செய்தார் மோசின் கான்