நேற்று சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் போட்டி நடைபெற்றது



டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது



சென்னை அணி சார்பாக சிவம் டூபே 48 ரன்கள் அடித்திருந்தார்



மொத்தமாக சென்னை அணி 144 ரன்களை குவித்தது



கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்



பின்னர் ரானாவும், ரிங்கு சிங்கும் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர்



பொறுமையாக ஆட தொடங்கிய இருவரும் போக போக பந்துகளை விளாசினர்



ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளை எடுத்த ரிங்கு சிங், மொத்தம் 54 ரன்களை குவித்தார்



ரானா, ஒரு சிக்சர்,6 பவுண்டரி அடித்து 57 ரன்களை குவித்தார்



18.3 ஓவர் முடிவில் 147 ரன்களை அடித்த கொல்கத்தா அணி சென்னையை வீழ்த்தியது