நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி, ராஜஸ்தானுடன் மோதியது இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி, பேட்டிங்கை தேர்வு செய்தது 18 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டம் இழந்தார் பின் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் உடன் கைகோர்த்தார் கிளென் மேக்ஸ்வெல் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 55 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 54 ரன்களையும் குவித்தனர் ஒருவழியாக ஆர்.சி.பி 171 ரன்களை குவித்தது பின்னர் களமிறங்கிய ராஜஸ்தானின் தொடக்க ஆட்டகாரர்கள் ரன் எடுக்காமலே ஆட்டம் இழந்தனர் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் டக்-அவுட் ஆனார் ஹெட்மையர் 35 ரன்களை குவித்தார் ஆரம்பம் முதலே தடுமாறிய ராஜஸ்தான் அணி 59 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது