2012ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டூபிளசிஸ் விளையாடி வருகிறார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 633 ரன்களுடன் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இதுவரை இவர் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2935 ரன்கள் அடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் டூபிளசிஸ் தான். சென்னை அணியின் கேப்டன் தோனியிடம் இவர் அதிக பற்று கொண்டவர். பேட்டிங் தவிர ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய அசத்தலான ஃபீல்டிங் மூலம் அதிரடி கேட்ச்கள் பிடித்து அசத்துவார். சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வென்ற வருடங்களில் இவர் அணிக்கு முக்கிய பங்கு ஆற்றியிருந்தார். சென்னை அணியில் 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரை விளையாடினார். சென்னை இல்லாத இரண்டு ஐபிஎல் தொடர்களில் புனே அணிக்காக விளையாடினார். 2018ஆம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் தொடரில் திரும்பிய பிறகு மீண்டும் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இவரை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.