சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் ருதுராஜ் கெய்க்வாட்.
நடப்பு தொடரில் 635 ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஆரம்பகால பயிற்சியாளர் மோகன் ஜாதவுடன் இளவயது ருதுராஜ் கெய்க்வாட்.
கடந்த தொடரில் தோனி அளித்த வாய்ப்பின் மூலம் ருதுராஜின் புகழ் இன்று பிரகாசமாக மிளிர்கிறது.
நடப்பு தொடரில் பாப்டுப்ளிசிஸ் - ருதுராஜ் இருவர் மட்டும் 1200 ரன்களை சென்னை அணிக்காக குவித்துள்ளனர்.
தனது பள்ளிப்பருவத்திலே ருதுராஜ் சக மாணவருடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 522 ரன்களை குவித்துள்ளார். ருதுராஜ் மட்டும் 270 ரன்களை அதில் எடுத்தார்.
தனது திறமையான பேட்டிங் மூலம் இந்திய அணியிலும் இடம்பிடித்து ஆடி வருகிறார்.