கடந்த 2004-ல் டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பலமாக தாக்கியது சுமார் 2,29,866 பேர் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 43,786 பேர் காணாமலே போயினர் தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டன அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தார்கள் உயிர்ப்பலி ஒருபுறமிருக்க மறுபுறம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டது கடலோரத்தில் எழுந்த அந்த மரண ஓலம் என்றைக்கும் தமிழக மக்களால் மறக்க முடியாது சுனாமி ஆழிப்பேரழிவின் 18-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது இதுபோன்ற பேரிழப்பு இனி வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டனர் மக்கள் ஆங்காங்ககே கடற்கரையில் பால் ஊற்றியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி வருகின்றனர்