இந்தியாவில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது



75வது சுதந்திர தினத்தையொட்டி ‘ஹர் கர் திரங்கா’ திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார்



அதன்படி வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு, பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்



இந்திய தேசிய கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளது



தேசிய கொடியிலுள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது



காவி - பலத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது



வெள்ளை - அமைதியையும், உண்மையையும் குறிக்கிறது



பச்சை - வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாயத்தையும் குறிக்கிறது



இந்திய தேசிய கொடியின் மையப் பகுதியில் நீல நிறத்தில், 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரம் உள்ளது



அசோக சக்கரம் தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது