சட்டத்தில் பட்ட படிப்பை முடித்து விட்டு தனது சினிமா கனவை நோக்கி பயணித்தார் சமுத்திரகனி டைரக்டர் கே.பாலசந்தரரின் துணை இயக்குனராக திரையுலக பணியை துவங்கினார் இவர் வெள்ளித்திரை வருவதற்கு முன்பே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார் 2009-ல் நாடோடிகள் படத்தை இயக்கி பெரும் பாராட்டினை பெற்றார் சமுத்திரகனி சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை படங்களில் நடித்து அசத்தினார் சமுத்திரகனி 2016-ல் வெளிவந்த விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் திரைக்கதை எழுவது சமுத்திரகனிக்கு அத்துபடியாக இருந்ததால் வசனங்கள் எழுத துவங்கினார் தனது படங்களில் தொடர்ந்து சமூக சீர்திருத்த கருத்துகளை பேசினார் தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிகளிலும் நடித்துள்ளார் சமுத்திரகனி பிறந்தநாள் காணும் சமுத்திரகனிக்கு வாழ்த்துக்கள்!