பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிராவின் தற்போதைய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி பதவிக்கு என்டிஏ வேட்பாளராக அறிவித்துள்ளது.
சிபி ராதாகிருஷ்ணன் 4 மே 1957 அன்று திருப்பூரில் பிறந்தார்.
சிபி ராதாகிருஷ்ணன் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்.
அவருக்கு நம் மாநிலத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ளது.
ஆர்எஸ்எஸ் உடன் தொடங்கி, அவர் 1974 இல் பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார்.
சிபி ராதாகிருஷ்ணன் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக செயலாளராகப் பொறுப்பேற்றார். 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் கோயம்புத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் 2004 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றினார்.
அவர் 2004-2007 வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தார்
அவர் 18 பிப்ரவரி 2023 முதல் 30 ஜூலை 2024 வரை ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றினார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் 31 ஜூலை 2024 முதல் மகாராஷ்டிராவின் ஆளுநராக உள்ளார்