உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன



சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 116 முறை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன



அதில் 58 முறை வென்று இந்தியா முன்னிலை வகித்து வருகிறது



ஆனால், ஐசிசி தொடர்கள் என வரும்போது நியூசிலாந்தின் ஆதிக்கம் தான் மேலோங்கி உள்ளது



கடந்த 20 வருடங்களில் 50 ஓவர் உலக் கோப்பையில் ஒருமுறை கூட இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை



2007 டி-20 உலகக் கோப்பை தொடங்கி எதிர்கொண்ட 3 முறையும், இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது



2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது



2021 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியிலும், இந்திய அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது



இந்நிலையில் தான் உலகக் கோப்பை மூலம் நியூசிலாந்து அணியை பழிவாங்க, இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது



இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது