லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது



யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சினை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் நீடித்து கொண்டே இருக்கிறது



ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா - கழுகு கதை சொன்னார்



நடிகர் ரஜினி, விஜய்யை தான் காக்காவாக குறிப்பிட்டு பேசி இருந்தார் என விஜய் ரசிகர்கள் முடிவு செய்து கொண்டனர்



'லியோ' வெற்றி விழாவில், காட்டுக்கு வேட்டைக்கு போன இரண்டு பேர் பற்றிய குட்டி ஸ்டோரி ரஜினியை பற்றி விஜய் பேசினார் என்ற கருத்தும் பரவியது



லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் இருவரின் ரசிகர்களும் எங்கள் இருவரையும் ஒப்பிடாதீர்கள் என வேண்டுகோள் வைத்தார்



இதை மீண்டும் வேறு விதமாக விஜய்யை சீண்டி, ரஜினி பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார் என்ற கருத்து பரவி வருகிறது



ரஜினியே தெளிவாக கூறியும் இந்த சர்ச்சை ஓயாமல் இருக்கிறது



மேலும் விஜய் இந்த சம்பவம் குறித்து G.O.A.T திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பதிலளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது



இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது